வர்த்தகம்

கெயில் நிறுவனம் லாபம் 80 சதவீதம் சரிவு

DIN

மத்திய அரசுக்குச் சொந்தமான கெயில் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 80 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல் சந்தைப்படுத்துதலில் ஏற்பட்ட இழப்பையடுத்து நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 80 சதவீதம் சரிவடைந்து ரூ.255.51 கோடியானது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,287.53 கோடியாக அதிகரித்திருந்தது.

அதேபோன்று கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதலில் வரிக்கு முந்தைய லாபமாக நிறுவனம் ரூ.850.48 கோடியை ஈட்டியிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வரிக்கு முந்தைய நிலையில் ஏற்பட்ட இழப்பு ரூ.545.56 கோடியாக இருந்தது. மேலும், இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதலில் நிறுவனம் ஈட்டிய வருவாயும் 39 சதவீதம் ரூ.9,443.72 கோடியானது. இதற்கு, கரோனா பொதுமுடக்கத்தால் ஆலைகளின் இயற்கை எரிவாயு பயன்படாடு பெருமளவில் குறைந்துபோனதே முக்கிய காரணம். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.18,311.46 கோடியிலிருந்து குறைந்து ரூ.12,087.46 கோடியானது.

கெயில் குழுமத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதல் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.12,180.62 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் ரூ.18,481.56 கோடியாக அதிகரித்திருந்தது.இதேகாலகட்டத்தில், குழுமத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,503.67 கோடியிலிருந்து சரிந்து ரூ.642.97 கோடியானது என கெயில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT