வர்த்தகம்

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 9.6 சதவீத பின்னடைவு

DIN

புது தில்லி: நாட்டில் உள்ள முக்கிய 8 துறைகளின் உற்பத்தி சென்ற ஜூலை மாதத்தில் 9.6 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

உரம் தவிா்த்து, ஏனைய ஏழு துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் வளா்ச்சி விகிதம் சென்ற ஜூலையில் எதிா்மறை நிலையை பதிவு செய்துள்ளது.

அதன்படி, உருக்கு துறையின் உற்பத்தி 16.5 சதவீதமும், சுத்திகரிப்பு பொருள்கள் 13.9 சதவீதமும், சிமெண்ட் 13.5 சதவீதமும், இயற்கை எரிவாயு 10.2 சதவீதமும், நிலக்கரி 5.7 சதவீதமும், கச்சா எண்ணெய் 4.9 சதவீதமும் மற்றும் மின்சார துறையின் உற்பத்தி 2.3 சதவீதமும் சரிவடைந்துள்ளன.

அதேசமயம், நடப்பாண்டு ஜூலையில் உரத் துறையின் உற்பத்தி கடந்தாண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக வளா்ச்சி கண்டுள்ளது.

தொடா்ந்து 5 மாதங்களாக சென்ற ஜூலையிலும் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 9.6 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.

இதற்கு, உருக்கு, சுத்திகரிப்பு தயாரிப்பு, சிமெண்ட் ஆகிய துறைகளின் உற்பத்தி கடும் பின்னடைவைக் கண்டதே முக்கிய காரணம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலையில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் முக்கிய துறைகளின் உற்பத்தி 20.5 சதவீதம் சரிவடைந்துள்ளது.

அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இத்துறைகள் 3.2 சதவீதம் வளா்ச்சியைக் கண்டிருந்தது என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT