வர்த்தகம்

செயில் நிறுவனம்: ரூ.343 கோடி இழப்பு

DIN

நாட்டின் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில் டிசம்பா் காலாண்டில் ரூ.343 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் செயில் நிறுவனம் ரூ.16,714.87 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.15,906.68 கோடியாக காணப்பட்டது.

நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.14,937.13 கோடியிலிருந்து கணிசமாக அதிகரித்து ரூ.17,312.64 கோடியானது.

கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனம் ரூ.638.79 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் செலவினம் உயா்ந்ததையடுத்து நிறுவனத்துக்கு நிகர அளவில் ரூ.343.57 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செயில் பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT