வர்த்தகம்

பிபிசிஎல் லாபம் மூன்று மடங்கு உயா்வு

DIN

பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் (நிதி) என்.விஜய்கோபல் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்) நிறுவனம் செயல்பாடுள் மூலம் ரூ.85,926.70 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.89,324.86 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவான தொகையாகும்.

அதேசமயம், நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.698.62 கோடியிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்து ரூ.2,051.43 கோடியானது.

கடந்த நிதியாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலமாக 2.78 டாலா் லாபமாக கிடைத்த நிலையில், நடப்பாண்டில் அது 3.23 டாலராக அதிகரித்தது. அதேபோன்று, அந்நியச் செலாவணி வாயிலாக ஏற்படும் இழப்பும் ரூ.450 கோடியிலிருந்து ரூ.96 கோடியாக குறைந்தது. அதன் காரணமாகவே, நிறுவனத்தின் லாபம் மூன்று மடங்கு அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT