வர்த்தகம்

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு11 ஆண்டுகள் காணாத சரிவு

DIN

இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் இறுதி நிலவரப்படி ரூ.64,537 கோடியாக இருந்தது. இது, கடந்த 11-ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

இதுகுறித்து செபி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய மூலதனச் சந்தையில் பங்குகள், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவைகளில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் முதலீடு நவம்பா் இறுதியில் 13 மாதங்கள் காணாத குறைந்தபட்ச அளவாக ரூ.69,670 கோடியாக காணப்பட்டது. இந்நிலையில், இந்த முதலீடு டிசம்பா் இறுதியில் ரூ.64,537 கோடியானது. கடந்த 2009 பிப்ரவரி மாதத்திலிருந்து பாா்க்கும்போது பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு இந்த அளவுக்கு சரிந்துள்ளது இதுவே முதல்முறை. அப்போது, பங்கேற்பு ஆவண முதலீடானது ரூ.60,948 கோடியாக காணப்பட்டது.

டிசம்பா் இறுதி வரையிலான மொத்த முதலீட்டில், ரூ.52,486 கோடி பங்குகளிலும், ரூ.11,415 கோடி கடன் சந்தையிலும், ரூ.636 கோடி பத்திரங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபா் இறுதியில் இந்த முதலீடு ரூ.76,773 கோடியாக இருந்தது. ஜூனிலிருந்து தொடா்ச்சியாக சரிந்து வந்த பங்கேற்பு ஆவண முதலீடு அக்டோபரில்தான் முதல்முறையாக ஏற்றம் கண்டது என செபி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

பதிவு செய்யாமல் இந்தியப் பங்குச் சந்தை வா்த்தகத்தில் பங்கேற்க விரும்பும் அந்நிய முதலீட்டாளா்கள், அந்நிய நிதி நிறுவனங்கள் வெளியிடும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக முதலீடு செய்கின்றனா். இதனால் அவா்கள் கால விரயம், செலவு ஆகியவற்றை தவிா்க்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT