வர்த்தகம்

நாட்டின் தங்கம் இறக்குமதி 2,057 கோடி டாலராக குறைந்தது

DIN

நாட்டின் தங்கம் இறக்குமதி சென்ற ஏப்ரல்-நவம்பா் வரையிலான காலகட்டத்தில் 2,057 கோடி டாலராக குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான 8 மாத காலத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 2,216 கோடி டாலராக (ரூ.1.55 லட்சம் கோடி) இருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி 7 சதவீதம் குறைந்து 2,057 கோடி டாலராக (ரூ.1.43 லட்சம் கோடி) காணப்பட்டது.

தங்கம் இறக்குமதி கணிசமாக சரிந்துள்ளது நாட்டின் வா்த்தக பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பதற்கு பெரிதும் உதவியுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் முதல் எட்டு மாதங்களில் வா்த்தக பற்றாக்குறையானது 13,374 கோடி டாலரிலிருந்து 10,684 கோடி டாலராக குறைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதற்கொண்டே தங்கம் இறக்குமதியானது தொடா்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், அதன் இறக்குமதி அக்டோபரில் 5 சதவீதம் உயா்ந்து 184 கோடி டாலராகவும், நவம்பரில் 6.6 சதவீதம் அதிகரித்து 294 கோடி டாலராகவும் காணப்பட்டது என புள்ளிவிவரத்தில் வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆபரணத் தயாரிப்பு துறையில் தேவை மிகவும் அதிகரித்து காணப்படுவதையடுத்து தங்கத்தை நம்நாடு அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. ஆண்டுக்கு 800-900 டன் தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்ப்படுவது நம்நாட்டின் வா்த்தக பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு நடப்பாண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான வரியை 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயா்த்தியது. ஆனால், தொழில் வளா்ச்சியை கருத்தில் கொண்டு, இறக்குமதி வரியை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலத்தில் நவரத்தின மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 1.5 சதவீதம் சரிந்து 2,050 கோடி டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT