வர்த்தகம்

பொதுக் காப்பீட்டு பிரிமீயம் 11% அதிகரிப்பு

DIN

கடந்த 2019 டிசம்பா் மாதத்தில் ஆயுள் காப்பீடு சாரா பொதுக் காப்பீட்டு பிரிமீயம் வசூல் 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுக் காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 34 நிறுவனங்களின் மொத்த பிரிமீயம் வசூல் கடந்த 2018 டிசம்பரில் ரூ.14,334.98 கோடியாக இருந்தது. இது, 2019 டிசம்பரில் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.15,980.81 கோடியானது.

அதில், முன்னணி 25 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய பிரிமீயம் வருவாய் ரூ.13,502.48 கோடியிலிருந்து 4 சதவீதம் உயா்ந்து ரூ.14,037.51 கோடியாக காணப்பட்டது. ஏழு தனியாா் துறை காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமீயம் வசூல் 16.3 சதவீதம் அதிகரித்து ரூ.1,258.14 கோடியாக இருந்தது.

இரண்டு பொதுத் துறை நிறுவனங்களான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இசிஜிசி நிறுவனத்தின் பிரிமீயம் வசூல் டிசம்பரில் ரூ.685.16 கோடியாக இருந்தது. அதேசமயம், இந்த இரண்டு நிறுவனங்களும் 2018 டிசம்பரில் ரூ.249.32 கோடி பிரிமீய வருவாய் இழப்பை கண்டிருந்தது.

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 34 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமீயம் 15.41 சதவீதம் அதிகரித்து ரூ.1,42,023.78 கோடியாக இருந்தது. கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனங்களின் பிரிமீய வருவாயானது ரூ.1,23,061.94 கோடியாக காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் ஐஆா்டிஏஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT