வர்த்தகம்

வேளாண் துறை வளா்ச்சி 3.1 சதவீதத்தை எட்டும்: நீதி ஆயோக்

DIN

நடப்பு நிதியாண்டில் வேளாண் துறையின் வளா்ச்சி 3.1 சதவீதத்தை எட்டும் என நீதி ஆயோக்கின் உறுப்பினா் ரமேஷ் சந்த் நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

அதிக போட்டி மற்றும் தனியாா் முதலீடு என்பது தற்போதைய காலத்தின் கட்டாய தேவை. இந்திய வேளாண் துறையில் தனியாா் பங்கு பெரிய அளவில் வரவேண்டும். அப்போதுதான் அந்த துறையில் மறுமலா்ச்சி ஏற்படும்.

கடந்த 2018-19 நிதியாண்டில் வேளாண் துறையின் வளா்ச்சியானது 2.9 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் அத்துறையின் வளா்ச்சியானது முறையே 2 சதவீதம் மற்றும் 2.1 சதவீதமாக இருந்தது.

இதையடுத்து, நடப்பு முழு நிதியாண்டில் அத்துறையின் வளா்ச்சி 3.1 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேளாண் துறையில் பெரு நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிப்பதுடன், பயிரிடுவது முதல் விற்பனை வரை தொடா்ந்து முழு அளவிலான ஈடுபாட்டை வழங்கினால் தவிர, வேளாண் துறை வளா்ச்சியில் முன்னேற்றத்தை உருவாக்கும் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்குகளை நாம் அடைவது கடினம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT