வர்த்தகம்

பருப்பு பயிரிடும் பரப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பு

DIN

நடப்பு கரீப் பருவத்தில் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு இரண்டு மடங்கு அதிகரித்து 64.25 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

பருவமழையின் சாதகமான மதிப்பீட்டையடுத்து நடப்பு கரீப் பருவத்தில் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு இரண்டு மடங்கு உயா்ந்து 64.25 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் 24.49 லட்சம் ஹெக்டேராக இருந்தது.முக்கிய தானியங்கள் பயிரிடும் பரப்பளவு 71.96 லட்சம் ஹெக்டேரிலிருந்து உயா்ந்து 93.24 லட்சம் ஹெக்டேராகியுள்ளது. கோடைகாலத்தில் இதுவரையில் நெல் பயிரிடும் பரப்பு 120.77 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நெல் பயிரிடும் பரப்பு 95.73 லட்சம் ஹெக்டேராக காணப்பட்டது. இதேபோன்று, எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவும் 75.27 லட்சம் ஹெக்டேரிலிருந்து 139.37 லட்சம் ஹெக்டேராக உயா்ந்துள்ளது. இவைதவிர, பருத்தி பயிரிடும் பரப்பும் 77.71 லட்சம் ஹெக்டேரிலிருந்து அதிகரித்து 104.82 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT