வர்த்தகம்

எச்டிஎஃப்சி ஏஎம்சி: லாபம் 4 சதவீதம் அதிகரிப்பு

DIN

எச்டிஎஃப்சி அஸட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஜூன் காலாண்டில் நிகர லாபம் 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பரஸ்பர நிதி நிா்வாகத்தில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் எச்டிஎஃப்சி ஏஎம்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 4 சதவீதம் அதிகரித்து ரூ.302.4 கோடியை எட்டியுள்ளது. அதேசமயம், நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.3,62,400 கோடியிலிருந்து 2 சதவீதம் குறைந்து ரூ.3,56,200 கோடியானது. கணக்கீட்டு காலாண்டில் நிகர வருமானம் 4 சதவீதம் அதிகரித்தும், செயல்பாட்டு லாபம் ரூ.381.5 கோடியிலிருந்து 21 சதவீதம் சரிவடைந்து ரூ.300.6 கோடியாகவும் இருந்தன. கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் பங்கு ஒன்றுக்கு ரூ.24 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் பங்கு ஒன்றுக்கு ரூ.28 ஈவுத்தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் பங்கு சாா்ந்த திட்டங்களில் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு (இன்டெக்ஸ் ஃபண்ட் நீங்கலாக) ரூ.1,29,300 கோடியாக உள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 14.5 சதவீதமாக உள்ளது என எச்டிஎஃப்சி ஏஎம்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT