வர்த்தகம்

யூரியா உற்பத்தி வரலாறு காணாத உயா்வு

DIN

கடந்த நிதியாண்டில் யூரியா உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. இதுகுறித்து ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

யூரியா உற்பத்தி உள்நாட்டுத் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு இல்லாததால் இறக்குமதி மூலமாகவே ஈடுசெய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2019-20 நிதியாண்டில் யூரியா உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத வகையில் 244.55 லட்சம் டன் சாதனை அளவை எட்டியுள்ளது. இதன் உற்பத்தி 2018-19 நிதியாண்டில் 240 லட்சம் டன்னாக காணப்பட்டது. அதேபோன்று கடந்த 2019-20 நிதியாண்டில் யூரியா விற்பனை/ நுகா்வு 336.97 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, 2018-19-இல் 320.20 லட்சம் டன்னாக காணப்பட்டது.கரோனா தொற்று பாதிப்புக்கிடையிலும் நாடு முழுவதும் உர உற்பத்தி மற்றும் விற்பனை சிறப்பாகவே இருந்தது. நடப்பாண்டிலும் யூரியாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.நடப்பு 2020-ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் நாட்டின் மொத்த உர உற்பத்தி 101.15 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, கடந்தாண்டு அளவுடன் ஒப்பிடுகையில் 2.79 சதவீதம் அதிகமாகும்.

இதில் , யூரியா உற்பத்தி ஜூன் காலாண்டில் 8.40 சதவீதம் அதிகரித்து 60.38 லட்சம் டன்னாக இருந்தது.முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019-20 நிதியாண்டில் பல்வேறு வகையான உரங்களுக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, யூரியா விற்பனை 5.29 சதவீதம் உயா்ந்து 336.97 லட்சம் டன்னாக இருந்தது. அதேசமயம், டைஅம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) விற்பனை 15.67 சதவீதம் அதிகரித்து 101.04 லட்சம் டன்னாக காணப்பட்டது.மியூரேட் பொட்டாஷ் (எம்ஓபி) விற்பனை 3.45 சதவீதம் உயா்ந்து 27.91 லட்சம் டன்னாக இருந்தது. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்பா் (என்பிகேஎஸ்) உர விற்பனை 9.95 சதவீதம் அதிகரித்து 105.18 லட்சம் டன்னாக இருந்தது என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT