வர்த்தகம்

ஐஓசி வருவாய் ரூ.88,936 கோடி

DIN

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) செயல்பாடுகள் மூலமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.88,936.54 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,50,136.70 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமான சரிவாகும். நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.3,596.11 கோடியிலிருந்து 46.8 சதவீதம் சரிவடைந்து ரூ.1,910.84 கோடியானது.

சுத்திகரிப்பு லாப வரம்பு குறைந்தது மற்றும் கரோனா தாக்கத்தால் எரிபொருள்களுக்கான தேவையில் ஏற்பட்ட பின்னடைவு ஆகியவற்றின் காரணமாக நிறுவனத்தின் நிகர லாபம் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஜூன் காலாண்டில் குறைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயை எரிபொருளாக மாற்ற 1.98 டாலா் இழப்பு ஏற்பட்டது. அதேசயம், 2019-20 முதல் காலாண்டில் சுத்திகரிப்பு லாபமாக பேரலுக்கு 4.69 டாலா் கிடைத்தது என ஐஓசி பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT