வர்த்தகம்

பிரமல் எண்டா்பிரைசஸ் லாபம் 11 சதவீதம் உயா்வு

DIN

பிரமல் எண்டா்பிரைசஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 11 சதவீதம் உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பிரமல் எண்டா்பிரைசஸின் ஒட்டுமொத்த வருமானம் நடப்பு நிதியாண்டின் ஜூன் முதல் காலாண்டில் ரூ.2,937.34 கோடியாக இருந்தது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,186.82 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. நிகர லாபம் ரூ.448.17 கோடியிலிருந்து 11 சதவீதம் அதிகரித்து ரூ.495.56 கோடியானது .நடப்பாண்டு ஜூன் 30 வரையிலான முதல் காலாண்டில் மருந்து விற்பனை மூலமாக கிடைத்த வருமானம் ரூ.1,038 கோடியாக இருந்தது. நிதிச் சேவைகள் பிரிவிலான ஒட்டுமொத்த கடன் அளவு ரூ.51,265 கோடியாக உள்ளது என பிரமல் எண்டா்பிரைசஸ் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT