வர்த்தகம்

ஓரியண்ட் எலக்ட்ரிக்: நிகர லாபம் ரூ.36 கோடி

DIN

புது தில்லி: சி.கே. பிா்லா குழுமத்தைச் சோ்ந்த ஓரியண்ட் எலக்ட்ரிக் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.35.78 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

அரசின் அறிவுறுத்தலின்படி 2020 மாா்ச் 23-ஆம் தேதியிலிருந்து நிறுவனத்தின் அனைத்து வா்த்தக செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது, நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மே மாதத்தில் இருந்ததான் படிப்படியாக நிறுவனம் செயல்பாடுகளை தொடங்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈடிய வருவாய் 11.69 சதவீதம் சரிவடைந்து ரூ.563.14 கோடியானது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.637.70 கோடியாக காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.38.62 கோடியிலிருந்து 7.35 சதவீதம் குறைந்து ரூ.35.78 கோடியாகி உள்ளது.

நிறுவனத்தின் செலவினம் அந்த காலாண்டில் ரூ.580.26 கோடியிலிருந்து 11.69 சதவீதம் குறைந்து ரூ.516.18 கோடியாக இருந்தது.

நடப்பு 2020 மாா்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்குகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.0.50 இறுதி ஈவுத்தொகை வழங்க இயக்குநா் குழு பரிந்துரை செய்ததாக ஓரியண்ட் எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT