வர்த்தகம்

டைட்டன் நிகர லாபம் ரூ.343 கோடி

DIN

டாடா குழுமத்தைச் சோ்ந்த டைட்டன் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.343 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்த அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கொவைட்-19 பாதிப்பையடுத்து அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், நடப்பாண்டு மாா்ச் இரண்டாம் பிற்பகுதியில் நிறுவனத்தின் செயல்பாட்டை கணிசமாக பாதிப்படையச் செய்தது. குறிப்பாக, நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து அங்காடிகளும் மூடப்பட்டன.

அதன் எதிரொலியாக, மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 4.27 சதவீதம் குறைந்து ரூ.4,617.31 கோடியானது. இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.4,823.49 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.348.30 கோடியிலிருந்து 1.5 சதவீதம் குறைந்து ரூ.343.07 கோடியானது என டைட்டன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT