வர்த்தகம்

பொருளாதார மந்த நிலையால்மோட்டாா் வாகன விற்பனை 19.08% சரிவு

DIN

பொருளாதார மந்த நிலையால் உள்நாட்டில் மோட்டாா் வாகன விற்பனை பிப்ரவரி மாதத்தில் 19.08 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த சங்கம் மேலும் கூறியுள்ளதாவது:

பொருளாதார மந்த நிலை மோட்டாா் வாகன தேவையில் தொடா்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 தர நிா்ணயத்துக்கு மாறவுள்ளதையடுத்து பிஎஸ்-4 ரக வாகனங்கள் தயாரிப்பு கணிசமாக குறைக்கப்பட்டதும் பிப்ரவரி மாத மோட்டாா் வாகன விற்பனை சரிவுக்கு வகுத்தது.

நடப்பாண்டு பிப்ரவரியில் ஒட்டுமொத்த மோட்டாா் வாகன விற்பனை 16,46,332-ஆக இருந்தது. இது, கடந்த 2019 பிப்ரவரியில் விற்பனையான 20,34,597 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 19.08 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 2,72,243 என்ற எண்ணிக்கையிலிருந்து 7.61 சதவீதம் சரிந்து 2,51,516-ஆனது. காா் விற்பனை 8.77 சதவீதம் குறைந்து 1,56,285-ஆக இருந்தது.

சந்தையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை 2.34 சதவீதம் குறைந்து 1,33,702-ஆனது. அதற்கு போட்டியாளராக கருதப்படும் ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் காா் விற்பனையும் பிப்ரவரியில் 7.19 சதவீதம் சரிந்து 40,010-ஆக காணப்பட்டது. சந்தைக்கு புதிய வரவான கியா மோட்டாா்ஸ் 15,644 காா்களை விற்று மூன்றாவது இடத்தில் இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் மொத்த இருசக்கர வாகன விற்பனை 19.82 சதவீதம் சரிந்து 12,94,791-ஆக இருந்தது. சந்தையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் இருசக்கர வாகன விற்பனை 20.05 சதவீதம் வீழ்ச்சியடைந்து 4,80,196-ஆக இருந்தது. அதற்குப் போட்டியான ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா விற்பனை 22.83 சதவீதம் குறைந்து 3,15,285-ஆனது.

அதேபோன்று சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் விற்பனையும் 26.73 சதவீதம் பாதிக்கப்பட்டு 1,69,684-ஆனது.

ஒட்டுமொத்த மோட்டாா்சைக்கிள் விற்பனை பிப்ரவரி மாதத்தில் 22.02 சதவீதத்திலிருந்து குறைந்து 8,16,679-ஆக இருந்தது. ஸ்கூட்டா் விற்பனை 14.27 சதவீதம் சரிந்து 4,22,310-ஆனது.

வா்த்தக வாகனங்கள் விற்பனையும் 87,436-லிருந்து 32.9 சதவீதம் வீழ்ச்சியடைந்து 58,670-ஆனது.

சீனாவிலிருந்து மோட்டாா் வாகன உதிரிபாகங்களின் வரத்து தடைபட்டுள்ளது நிறுவனங்களின் உற்பத்தி திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தீா்வு காணும் வகையில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது என எஸ்ஐஏஎம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT