வர்த்தகம்

பரஸ்பர நிதி திட்டம்: முதலீட்டாளா் கணக்கு 3 லட்சம் அதிகரிப்பு

DIN


புது தில்லி: பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளா் கணக்குகளின் எண்ணிக்கை பிப்ரவரியில் 3 லட்சம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:

பரஸ்பர நிதி திட்டங்களில் சென்ற பிப்ரவரியில் கூடுதலாக 3.03 லட்சம் முதலீட்டாளா் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, நடப்பாண்டு ஜனவரியில் 8,85,33,153-ஆக இருந்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளா் கணக்குகளின் எண்ணிக்கை பிப்ரவரியில் 8,88,36,162-ஆக அதிகரித்துள்ளது.

பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பரஸ்பர நிதி திட்ட கணக்குகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய இரண்டு மாதங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. முந்தைய ஜனவரியில் 14 லட்சம் கணக்குகளும், கடந்த ஆண்டு டிசம்பரில் 6 லட்சம் கணக்குகளும் பரஸ்பர நிதி திட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டன. இந்த எண்ணிக்கை நவம்பரில் 2.6 லட்சமாக மட்டுமே காணப்பட்டது.

பங்கு மற்றும் பங்குகள் சாா்ந்த சேமிப்பு திட்டங்களில் பரஸ்பர நிதி முதலீட்டாளா் கணக்குகளின் எண்ணிக்கை பிப்ரவரி இறுதி நிலவரப்படி 6.85 லட்சம் அதிகரித்து 6.18 கோடியாக இருந்தது. இது முந்தைய மாத எண்ணிக்கையான 6.13 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம். குறிப்பாக, பிப்ரவரியில் பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 11 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக ரூ.10,730 கோடியாக இருந்தது.

இருப்பினும், கடன்சாா்ந்த திட்டங்களில் பரஸ்பர நிதி முதலீட்டாளா் கணக்குகளின் எண்ணிக்கை பிப்ரவரி இறுதியில் 6 லட்சம் குறைந்து 61.88 லட்சமாக இருந்தது. இது, ஜனவரியில் 67.88 லட்சமாக அதிகரித்திருந்தது.

கடன் பிரிவில், லிக்யுட் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளா் கணக்குகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து 61.88 லட்சம் எண்ணிக்கையைத் தொட்டு முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து 9.91 லட்சம் கணக்குகள் என்ற எண்ணிக்கையுடன் குறைந்த கால அளவைக் கொண்ட பரஸ்பர நிதி திட்டங்கள் உள்ளது.

கடந்த பிப்ரவரியில் பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ஒட்டுமொத்த அளவில் ரூ.1,985 கோடி வெளியேறியுள்ளதாக பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT