வர்த்தகம்

உற்பத்தி பணிகளைத் தொடங்க ஹோண்டா ஆயத்தம்

DIN

ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் உற்பத்தி பணிகளை படிப்படியாக தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு ஹோண்டா நிறுவனம் உற்பத்தி பணிகளைத் தொடங்க முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, கா்நாடகத்தில் நரசபுராவில் உள்ள நிறுவனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய ஆலையில் மே 25 ஆம் தேதியிலிருந்து படிப்படியாக உற்பத்தி பணிகளை துவக்க உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது கட்டமாக, இதர மூன்று ஆலைகளிலிருந்தும் ஜூன் மாதம் முதல் வாரம் முதல் உற்பத்தி பணிகள் தொடங்கப்படவுள்ளன.

நிறுவனத்தின் 99 சதவீத 300-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனுமதிகளை உரிய அமைப்புகளிடமிருந்து ஏற்கெனவே பெற்றுள்ளன. அவை அனைத்தும் உற்பத்தி நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளன என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னிலையில் உள்ள ஹோண்டா நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 64 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்ட ஆலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT