வர்த்தகம்

சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.82 கோடி

DIN

சென்னையைச் சோ்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நான்காவது காலாண்டில் ரூ.82 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.26 கோடியாக காணப்பட்டது.

மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.218 கோடியை நிகர லாபமாகப் பெற்றுள்ளது. 2018-19 நிதியாண்டில் லாபம் ரூ.145 கோடியாக இருந்தது.

நடப்பு 2020-ஆம் ஆண்டு மாா்ச் 31 இறுதி நிலவரப்படி ரூ.2,113 கோடி மதிப்பிலான கடன்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இது, 2019 காலகட்டத்தில் ரூ.2,449 கோடியாக காணப்பட்டது.

வீட்டு சந்தையைப் பொருத்தவரையில் அடுத்து வரும் இரண்டு காலாண்டுகளில் விற்பனை மந்தமானதாகவே இருக்கும் என சுந்தரம் ஹோம் பைனான்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT