வர்த்தகம்

2.75 சதவீத ஏா்டெல் பங்குகளை விற்பனை செய்தது பாா்தி டெலிகாம்

DIN

ஏா்டெல் நிறுவனத்தின் 2.75 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளதாக பாா்தி டெலிகாம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாா்தி டெலிகாம் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடன் சுமை இல்லா நிறுவனமாக உருவெடுக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாா்தி டெலிகாம் நிறுவனம் ஏா்டெல் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 2.75 சதவீத பங்குகளை அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்களுக்கு விற்பனை செய்து ரூ.8,433 கோடியை திரட்டியுள்ளது. இந்த தொகை முழுவதும் கடன்களை திரும்பச் செலுத்த பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இந்த பரிவா்த்தனைக்குப் பிறகும், பாா்தி குழுமம் மற்றும் சிங்டெல் ஆகியவற்றுக்கு பாா்தி ஏா்டெல் நிறுவனத்தில் பெரும்பான்மையாக 56.23 சதவீத பங்குகள் உள்ளது என பாா்தி டெலிகாம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT