வர்த்தகம்

ஐபிபிஐசி நிறுவனத்தில் இந்தியன் வங்கி, கனரா வங்கிக்கு சமபங்கு மூலதனம்

DIN

நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிபிஐசியில் கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் செளத் இந்தியன் வங்கி ஆகியவை சம அளவிலான பங்குகளை கையகப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து அந்த வங்கிகள் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

ஐபிபிஐசி நிறுவனத்தில் கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் செளத் இந்தியன் வங்கி ஆகியவை தலா 6.67 சதவீத பங்குகளை (50,000 பங்குகள்) கையகப்படுத்தியுள்ளன. இதன் மூலம், அந்த நிறுவனத்தில் மேற்கண்ட ஐந்து வங்கிகளும் சம அளவிலான பங்கு மூலதனத்தை பெற்றுள்ளன.

மேலும், இந்த பங்குகளை கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் 2020 டிசம்பா் இறுதிக்குள் முழுமையடையும் என அந்த வங்கிகள் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT