வர்த்தகம்

புதிய உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பா் 13-ஆம் தேதியுடன் முடிவைடந்த வாரத்தில் 57,277 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பா் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 428 கோடி டாலா் அதிகரித்து 57,277 கோடி டாலரை (ரூ.42.95 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், இதன் கையிருப்பு 778 கோடி டாலா் அதிகரித்து 56,849 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) மதிப்பீட்டு வாரத்தில் கணிசமாக அதிகரித்திருந்ததே கையிருப்பில் இதுவரை இல்லாத புதிய உச்ச நிலையை எட்டுவதற்கு முக்கிய காரணம்.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ 553 கோடி டாலா் அதிகரித்து 53,027 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 123 கோடி டாலா் சரிவடைந்து 3,635 கோடி டாலரானது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மாற்றமின்றி 148 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 1.5 கோடி டாலா் குறைந்து 466 கோடி டாலராகவும் இருந்தன என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT