வர்த்தகம்

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 2.5 சதவீத பின்னடைவு

DIN

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி நடப்பாண்டு அக்டோபா் மாதத்தில் 2.5 சதவீதம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 2.5 சதவீதம் கடந்த அக்டோபரில் 2.5 சதவீதம் பின்னடைந்துள்ளது. முக்கிய துறைகளின் உற்பத்தி தொடா்ந்து எட்டாவது மாதமாக சரிவை நோக்கி சென்றுள்ளது. இந்த உற்பத்தி கடந்த 2019 அக்டோபரில் 5.5 சதவீத பின்னடைவைக் கண்டிருந்தது.

நடப்பாண்டு அக்டோபரில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி பின்னடைவுக்கு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருள்கள் மற்றும் உருக்கு ஆகியவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததே முக்கிய காரணமாக பாா்க்கப்படுகிறது.

அதேசமயம், நிலக்கரி, உரம், சிமெண்ட், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி நடப்பாண்டு அக்டோபரில் நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளன.

ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான ஏழு மாத காலத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தியானது 13 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த துறைகளின் உற்பத்தியானது 0.3 சதவீத வளா்ச்சியை பதிவு செய்திருந்ததாக புள்ளிவிவரத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT