வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாற்று உச்சம்

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பா் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57,529 கோடி டாலா் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நவம்பா் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 252 கோடி டாலா் அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 57,529 கோடி டாலரை எட்டியுள்ளது.

இதற்கு முந்தைய நவம்பா் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 428 கோடி டாலா் உயா்ந்து 57,277 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணக்கீட்டு நவம்பா் -20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 283 கோடி டாலா் உயா்ந்து 53,310 கோடி டாலராக இருந்தது.

கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 34 கோடி டாலா் குறைந்து 3,601 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 40 லட்சம் டாலா் அதிகரித்து 149 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 2 கோடி டாலா் உயா்ந்து 468 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT