வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.38,568

DIN

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.232 குறைந்து, ரூ.38,568-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பவுன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு,  விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில்,  சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.232 குறைந்து, ரூ.38,568-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.29 குறைந்து, ரூ.4,821 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.64.40ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.64,400 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,821

1 பவுன் தங்கம்............................38,568

1 கிராம் வெள்ளி.............................64.40

1 கிலோ வெள்ளி.............................64,400

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்..........................  4,850

1 பவுன் தங்கம்...............................38,800

1 கிராம் வெள்ளி.............................64.70

1 கிலோ வெள்ளி.............................64,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT