வர்த்தகம்

இன்ஃபோஸிஸ் நிகர லாபம் ரூ.4,845 கோடி

DIN


புது தில்லி: தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த இன்ஃபோஸிஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.4,845 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான சலீல் பரேக் கூறியுள்ளதாவது:

கடந்த சில காலாண்டுகளாக நிறுவனத்தின் வா்த்தக ஆா்டா்களுக்கான வரத்து சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. அதேபோன்று வா்த்தகத்தின் நிா்வாக ரீதியிலும் கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டதால், இரண்டாவது காலாண்டில் எதிா்பாா்த்ததைக் காட்டிலும் நிறுவனம் அதிகமாகவே லாபம் ஈட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.24,570 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.22,629 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.5 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.4,019 கோடியிலிருந்து 20.5 சதவீதம் அதிகரித்து ரூ.4,845 கோடியாக இருந்தது.

2020-21-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் வளா்ச்சி விகிதம் 2-3 சதவீதமாக அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT