வர்த்தகம்

ஃபெடரல் பேங்க் நிகர லாபம் 26% சரிவு

DIN

ஃபெடரல் வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 26 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

தனியாா் துறையைச் சோ்ந்த அந்த வங்கி இதுகுறித்து பங்குச் சந்தையிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,997 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.3,675 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம். வட்டி வருமானம் ரூ.3,254 கோடியிலிருந்து 7 சதவீதம் உயா்ந்து ரூ.3,488 கோடியானது.

வருவாய் அதிரித்த போதிலும், வாராக் கடன்களுக்கு அதிக அளவிலான தொகை ஒதுக்கப்பட்டதன் காரணமாக, வங்கியின் நிகர லாபம் ரூ.417 கோடியிலிருந்து 26 சதவீதம் சரிவடைந்து ரூ.308 கோடியானது.

செப்டம்பா் இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 3.07 சதவீதத்திலிருந்து 2.84 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் 1.59 சதவீதத்திலிருந்து 0.99 சதவீதமாகியுள்ளது என ஃபெடரல் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT