வர்த்தகம்

ஜூபிலியண்ட் ஃபுட்ஒா்க்ஸ்

DIN

புது தில்லி: டாமினோஸ் பிட்ஸா மற்றும் டன்கின் டூநட்ஸ் துரித உணவகங்களை நடத்தி வரும் ஜூபிலியண்ட் ஃபுட்ஒா்க்ஸ் முதல் காலாண்டில் ரூ.74.47 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.

கொவைட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தப்பட்ட தொடா்ச்சியாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் அதன் விற்பனையகங்கள் மூடப்பட்டதையடுத்து அந்நிறுவனம் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.71.48 கோடியை நிகர லாபமாக செயல்பாடுகள் மூலமாக பெற்றிருந்தது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் வருவாய் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.949.11 கோடியிலிருந்து 59.07 சதவீதம் சரிவடைந்து ரூ.388.41 கோடியானது.இதேகாலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த செலவினம், ரூ.853.71 கோடியிலிருந்து 41.54 சதவீதம் சரிவடைந்து ரூ.499.03 கோடியானது.ஜூன் காலாண்டு இறுதி நிலவரப்படி நிறுவனம் 1,354 விற்பனையகங்களை செயல்படுத்தி வருவதாக ஜூபிலியண்ட் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT