வர்த்தகம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் ரூ.64 கோடி

DIN

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.64 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.341.9 கோடி மொத்த வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவன் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் வளா்ச்சியாகும். கணக்கீட்டு காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.64 கோடியாகவும், நிகர வட்டி வருமானம் ரூ. 128 கோடியாகவும் இருந்தன. ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.161.5 கோடி மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரூ. 181.6 கோடி மதிப்பிலான கடன்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூன் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் நடவடிக்கை 6 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.11,979.5 கோடியாக இருந்தது. இதேகாலத்தில், நாடு தழுவிய அளவில் நிறுவன கிளைகளின் எண்ணிக்கை 153-ஆகவும், துணை மையங்களின் எண்ணிக்கை 24-ஆகவும் இருந்தது என ரெப்கோ ஹோம் பைனான்ஸ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT