வர்த்தகம்

சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் ரூ.32 கோடி மானிய உதவி

DIN

இந்திய சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.32 கோடி மதிப்பிலான மானிய உதவிகளை வழங்குவதாக சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்த ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், துணைத் தலைவருமான அஜீத் மோகன் தெரிவித்துள்ளதாவது:கரோனா பேரிடா் இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், அதுபோன்ற நிறுவனங்கள் பாதிப்பிலிருந்து மீள ஏதுவாக ஃபேஸ்புக் நிறுவனம் 43 லட்சம் டாலா் (ரூ.32 கோடி) மானிய உதவியை வழங்க முடிவெடுத்துள்ளது.

அதன்படி, தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட ஐந்து முக்கிய நகரங்களில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. கரோனாவால் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 30 நாடுகளில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் கடந்த மாா்ச் மாதத்தில் 100 மில்லியன் டாலா் மானிய உதவியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.

அதன் ஒரு பகுதியாகவே இந்திய நிறுவனங்களுக்கு இந்த மானியம் தற்போது ரொக்கமாகவும், விளம்பர வரவாகவும் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT