வர்த்தகம்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இழப்பு ரூ.600 கோடி

DIN

விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் முதல் காலாண்டில் ரூ.600.5 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கரோனா பொது முடக்கம் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலுமான முதல் காலாண்டில் ரூ.600.5 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது.

அதேசமயம், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.262.8 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. விமான சேவையின் மூலமாக முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.521 கோடியை மட்டுமே வருவாயாக ஈட்டியிருந்தது.

இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.3,002.8 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைவாகும். நிறுவனத்தின் செயல்பாட்டு செலவினம் ரூ.2,886.7 கோடியிலிருந்து ரூ.1,311.6 கோடியாக குறைந்தது என ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT