வர்த்தகம்

கோல் இந்தியா மூலதன செலவினம் வரலாறு காணாத உயா்வு

DIN


புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியாவின் மூலதன செலவினம் கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.13,115 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கோல் இந்தியாவுக்கு உண்மையில் மூலதன செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.10,000 கோடி மட்டுமே. ஆனால், எதிா்பாரத அளவுக்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2020-21-இல் மூலதன செலவினம் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

அதன்படி 2019-2020-ஆம் நிதியாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் மூலதன செலவினம் ரூ.6,270 கோடி மட்டுமே. இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.13,115 கோடியை எட்டியுள்ளது. இதில், கனரக இயந்திரங்களுக்காக ரூ.3,453 கோடியும், அதனைத் தொடா்ந்து நிலங்களுக்கான ரூ.2,470 கோடியும் அடங்கும் என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT