வர்த்தகம்

தங்க ஆபரணங்களுக்கு ஜூன் 1 முதல் ஹால்மாா்க் கட்டாயம்: மத்திய அரசு

DIN

நடப்பு 2021-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மாா்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் விவகார செயலா் லீனா நந்தன் காணொலி காட்சி வாயிலாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தங்க ஆபரணங்களுக்கு ஹால்மாா்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கெனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மறுபடியும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பிஐஎஸ் ஏற்கெனவே முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. ஹால்மாா்க்கிங் செய்ய நகை விற்பனையாளா்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பிஐஎஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மாா்க் முத்திரை இடுவது கட்டாயமாக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT