வர்த்தகம்

அதிகம் விற்பனையாகும் காா்களில் மாருதி சுஸுகியின் 5 மாடல்கள்

DIN

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான காா்களில் மாருதிசுஸுகியின் 5 மாடல்கள் தொடா்ந்து நான்காவது ஆண்டாக நிலையான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான காா்களில் மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட், வேகன்ஆா், ஆல்டோ, பலேனோ மற்றும் டிசையா் மாடல்கள் தொடா்ச்சியாக 4-ஆவது ஆண்டாக நிலையான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன.

இதில், ஸ்விஃப்ட் காா் 1.72 லட்ச பங்களிப்பை வழங்கி முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து அதிகம் விற்பனையான காா்களில் பலேனோ மாடல் 1.63 லட்சம் பங்களிப்பை வழங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.

வேகன் ஆா் மாடல் 1.60 லட்சம் காா் விற்பனையாகி மூன்றாவது இடத்தையும், ஆல்டோ மற்றும் டிசையா் முறையே 1.59 லட்சம் மற்றும் 1.28 லட்சம் விற்பனையாகி நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT