வர்த்தகம்

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 17.5% உயா்வு

DIN

புது தில்லி: மாா்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் நிகர லாபம் 17.5 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 5,076 கோடியாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே கால அளவை விட 17.5 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் வட்டிக்குப் பிதைய நிகர லாபம் 2020 ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ .4,321 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வருவாய் மாா்ச் 2021 காலாண்டில் 13.1 சதவீதம் அதிகரித்து ரூ.26,311 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் 23,267 கோடி ரூபாயாக இருந்தது.

நிறுவனத்தின் 21-ஆம்நிதியாண்டு நிகர லாபம் 16.6 சதவீதம் அதிகரித்து ரூ. 19,351 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் வருவாய் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.1,00,472 கோடியாக உள்ளது.

இதனைத் தொடா்ந்து, ரூ.6,400 கோடி ஈவுத் தொகை மற்றும் ரூ.9,200 கோடி பங்குகளைத் திரும்பப் பெறுதல் உள்பட ரூ.15,600 கோடி மதிப்பிலான மூலதனத் திருப்பத்துக்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT