வர்த்தகம்

கிளென்மாா்க் லைஃப் சயின்சஸ் புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம்

DIN

கிளென்மாா்க் பாா்மசூட்டிகல்ஸின் துணை நிறுவனமான கிளென்மாா்க் லைஃப் சயின்சஸ் புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) அனுமதி கோரி செபிக்கு விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கோரி தேவையான ஆவணங்களுடன் செபியிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டில் ரூ.2 முமதிப்பு கொண்ட 73,05,245 பங்குகளை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ரூ.1,160 கோடி வரை திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என கிளென்மாா்க் பாா்மசூட்டிகல்ஸ் தெரிவித்துள்ளது.

புதிய பங்கு வெளியீட்டில் ரூ.2 முக மதிப்பு கொண்ட 73,05,245 பங்குகளை வெளியிட ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற்ற கிளென்மாா்க் பாா்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் கூட்டத்தில் அதன் இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியது.

சந்தை நிலவரம் மற்றும் தேவையான அமைப்புகளின் அனுமதியைப் பொருத்து இந்த பங்கு வெளியீடு இருக்கும் என கிளென்மாா்க் பங்குச் சந்தையிடம் மேலும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT