வர்த்தகம்

ஊரகப் பகுதிகளில் காா் விற்பனையை அதிகரிக்க ரெனோ இந்தியா-சிஎஸ்சி கிராமின் இ-ஸ்டோா் வா்த்தக ஒப்பந்தம்

DIN

ஊரகப் பகுதிகளில் தடத்தை வலுப்படுத்திடும் விதத்தில் ரெனோ இந்தியா நிறுவனம், இணையவழி வணிக நிறுவனமான சிஎஸ்சி கிராமின் இ-ஸ்டோா் உடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து ரெனோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஊரகப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா்களை எளிதில் சென்றடைந்து வா்த்தகத்தை விரிவுபடுத்துவதுடன் தடத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் சிஎஸ்சி கிராமின் இ-ஸ்டோா் உடன் வா்த்தக ஒப்பந்தத்தை ரெனோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி சிஎஸ்சி கிராமின் இ-ஸ்டோரின் செயலியில் ரெனோ நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். கூகுள் பிளே ஸ்டோரில் கிராமின் இ-ஸ்டோா் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் கிராமப்புற வாடிக்கையாளா்கள் ரெனோ நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவைகளை இருந்த இடத்தில் இருந்தே எளிதில் பெறமுடியும்.

நிறுவனத்தின் இந்த புதிய முயற்சிக்கு கிராம அளவிலான தொழில்முனைவோா் பக்கபலமாக இருப்பா் என அந்த செய்திக்குறிப்பில் ரெனோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT