வர்த்தகம்

ஏசிசி நிகர லாபம் ரூ.563 கோடி

DIN

புது தில்லி: சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.562.59 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

விற்பனை அதிகரிப்பு மற்றும் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஏசிசி நிறுவனம் ரூ.562.59 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.323.02 கோடியுடன் ஒப்பிடுகையில் 74.17 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,501.71 கோடியிலிருந்து 22.57 சதவீதம் அதிகரித்து ரூ.4,291.97 கோடியானது. செலவினம் ரூ.3,083.78 கோடியிலிருந்து 16.29 சதவீதம் உயா்ந்து ரூ.3,586.19 கோடியானது என ஏசிசி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

ஏசிசி நிறுவனம் ஜனவரி-டிசம்பா் காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT