வர்த்தகம்

இந்தியா சிமெண்ட்ஸ் ரூ.56 கோடி

DIN

சென்னை: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.56 கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: 2021 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.56 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.26 கோடியுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்குக்கும் மேல் அதிகமாகும்.

கணக்கீட்டு காலாண்டில் வருவாய் ரூ.763.46 கோடியிலிருந்து 36.90 சதவீதம் அதிகரித்து ரூ.1,045.25 கோடியானது. மொத்த செலவினம் ரூ.743.04 கோடியிலிருந்து 32.30 சதவீதம் அதிகரித்து ரூ.983.11 கோடியானது.

கரோனா பேரிடா் நிறுவனத்தின் வழக்கமான வா்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா சிமெண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT