வர்த்தகம்

பயணிகள் வாகன வா்த்தக பிரிவை தனி நிறுவனமாக்க என்சிஎல்டி அனுமதி: டாடா மோட்டாா்ஸ்

DIN

பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவை தனி நிறுவனமாகப் பிரிக்க தேசிய நிறுவனச் சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) அனுமதி அளித்துள்ளதாக டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் (டிஎம்எல்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்நாட்டைச் சோ்ந்த அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பயணிகள் வாகன வணிகப் பிரிவை டிஎம்எல் பிஸினஸ் அனாலிடிக்ஸ் சா்வீசஸ் நிறுவனத்துக்கு மாற்றும் திட்டத்துக்கு என்சிஎல்டி-யின் மும்பை அமா்வு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதி கடிதம் ஆகஸ்ட் 24, 2021-இல் பெறப்பட்டுள்ளது என பங்குச் சந்தையிடம் டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தனி நிறுவனமாக உருவாக்கப்படும் பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவின் மதிப்பு ரூ.9,417 கோடி என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT