வர்த்தகம்

விரைவில் மாருதி சுஸுகி நிறுவனத் தயாரிப்புகளின் விலை உயர்கிறது?

DIN

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி ஒரே ஆண்டில் நான்காவது முறையாக மீண்டும் சில தயாரிப்புகளின் விலையை விரைவில் உயர்த்த இருக்கிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்த ஜனவரிக்குள் மீண்டும் தன் முக்கியத் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க இருக்கிறது . உதிரி பாகங்களின் விலையேற்றம் ஒரு காரணம் என்றாலும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மாருதி விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த நவம்பா் மாத வாகன விற்பனை 9 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கான தட்டுப்பாடு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக, நடப்பாண்டு நவம்பரில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 9 சதவீதம் சரிவடைந்து 1,39,184-ஆனது. கடந்தாண்டு நவம்பரில் இந்த விற்பனை 1,53,223-ஆக அதிகரித்து காணப்பட்டது.

உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 1,44,219-லிருந்து 18 சதவீதம் சரிவடைந்து 1,17,791-ஆக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் மாருது சுஸுகி சில குறிப்பிட்ட தயாரிப்புகளின் விலையை மட்டும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT