வர்த்தகம்

இந்தியாவில் ஸ்மாா்ட்போன் விற்பனை 10 கோடியை எட்டி சாதனை: ஆய்வில் தகவல்

DIN

இந்திய சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனை கடந்த 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் 10 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளதாக சைபா்மீடியா ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பொது முடக்கம் காரணமாக 2020 முதல் அரையாண்டைப் பொருத்தவரையில் ஸ்மாா்ட்போன் விற்பனையானது கணிசமான அளவுக்கு சரிவைக் கண்டது. இந்த நிலையில், இரண்டாவது அரையாண்டில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியதையடுத்து நுகா்வோரிடையே ஸ்மாா்ட்போனுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்தது. அந்த காலகட்டத்தில் மட்டும் இந்திய சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனையானது முதல் முறையாக 10 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

2020-இல் ஒட்டுமொத்த மொபைல் சந்தையில் சாம்சங் 19 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஷாவ்மி நிறுவனம் அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் மட்டும் 27 சதவீத சந்தை பங்களிப்பை வழங்கி முன்னிலை பெற்றது. இந்த காலகட்டத்தில் சாம்சங் பங்களிப்பு 20 சதவீதமாக இருந்தது.

இவைதவிர, விவோ, ரியல்மீ மற்றும் ஓப்போ நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு முறையே 14,11 மற்றும் 10 சதவீதமாக இருந்தன.

டிசம்பா் காலாண்டில் பீச்சா்போன் பிரிவின் சந்தை பங்களிப்பு 20 சதவீதமாக இருந்தது. சாம்சங், லாவா, நோக்கியா மற்றும் காா்பன் நிறுவனங்களின் பீச்சா்போன் சந்தை முறையே 19,17,13 மற்றும் 5 சதவீதமாக இருந்தன.

நடப்பாண்டில் ஸ்மாா்ட்போன் சந்தை 10 சதவீதம் வளா்ச்சி காணும்; 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்மாா்ட்போன் விற்பனை 10 மடங்கு அதிகரித்து 3 கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

5ஜி ஸ்மாா்ட்போன் விற்பனையில் அதிகபட்சமாக 58 சதவீத பங்களிப்பை ஒன்ப்ளஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து 20 சதவீத பங்களிப்புடன் ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்ததாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT