வர்த்தகம்

நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.59% ஆகக் குறைவு

DIN

கடந்த டிசம்பரில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.59 சதவீதமாகக் குறைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவான பணவீக்கமாகும்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. போக்குவரத்தில் தடை ஏற்பட்டதால் காய்கறிகள் உள்ளிட்டவற்றின் வரத்து குறைந்து அவற்றின் விலை அதிகரித்தது.

பருவமழை, புயல் உள்ளிட்டவற்றின் காரணமாகவும் காய்கறிகளின் விலை அதிகரித்தே காணப்பட்டது. அதன் காரணமாக நாட்டின் சில்லறை பணவீக்கம் நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 2 முதல் 6 சதவீத அளவுக்கு அதிகமாகவே இருந்தது. பொது முடக்கத்துக்குத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போக்குவரத்து சீராகத் தொடங்கியது.

அதன்காரணமாக சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால், அவற்றின் விலை குறைந்தது. சில்லறை பணவீக்கமும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. கடந்த டிசம்பா் மாதத்தில் பணவீக்கம் 4.59 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் காய்கறிகளின் விலை 10.41 சதவீதம் குறைந்து காணப்பட்டது. நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் பணவீக்கம் உச்சபட்ச இலக்கான 6 சதவீதத்தை விடக் குறைந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த நவம்பரில் இது 6.93 சதவீதமாக இருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT