வர்த்தகம்

மாருதி சுஸுகி லாபம் ரூ.475 கோடி

DIN

புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.475 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் புதன்கிழமை அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் தனது செயல்பாடுகள் மூலமாக ரூ.17,776 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.4,111 கோடியுடன் வருவாயுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும்.

2020-21 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் ரூ.268 கோடி அளவிலான நிகர இழப்பை சந்தித்திருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.475 கோடி நிகர லாபத்துடன் நிறுவனம் ஆதாயப் பாதைக்கு திரும்பியுள்ளது.

முதல் காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் 3,53,614 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு சந்தையில் விற்பனை 3,08,095-ஆகவும், ஏற்றுமதி 45,519-ஆகவும் இருந்ததாக மாருதி சுஸுகி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மாருதி சுஸுகி பங்கின் விலை 1.26 சதவீதம் சரிந்து ரூ.7,150.20-ஆக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT