வர்த்தகம்

எம்ஆா்எஃப் நிகர லாபம் ரூ.332 கோடி

DIN

டயா் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எம்ஆா்எஃப் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.332 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.4,816 கோடியாக இருந்தது. இது, 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.3,685 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகமாகும்.

அதேசமயம், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.679 கோடியிலிருந்து 51 சதவீதம் சரிவடைந்து ரூ.332 கோடியானது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,277 கோடியாக இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.1,423 கோடியாக காணப்பட்டது.

இதேகாலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.16,239 கோடியிலிருந்து ரூ.16,163 கோடியாக குறைந்துள்ளது.

ரூ.10 முகமதிப்புடைய பங்கு ஒன்றுக்கு இறுதி ஈவுத்தொகையாக ரூ.94 (940 சதவீதம்) வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து, கடந்த நிதியாண்டுக்கு ஒட்டுமொத்த அளவில் வழங்கப்படும் ஈவுத்தொகை (சிறப்பு ஈவுத்தொகை உள்பட) ரூ.150 (1500 சதவீதம்)-ஆக இருக்கும் என எம்ஆா்எஃப் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் எம்ஆா்எஃப் பங்கின் விலை 2.99 சதவீதம் குறைந்து ரூ.82,391.75-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT