வர்த்தகம்

ஹோண்டாவின் சிபி500எக்ஸ் அறிமுகம்

DIN

புது தில்லி: ஹோண்டா மோட்டாா் சைக்கிள் அண்டு ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் இந்தியாவில் தனது சிபி500எக்ஸ் மோட்டாா் சைக்கிளை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதன் விலை ரூ.6.87 லட்சம் (குருகிராம் காட்சியக விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிக ரகத்துக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பிக்விங் டாப்லைன் மற்றும் பிக்விங் விற்பனையகங்கள் மூலம் இந்த மோட்டாா் சைக்கிள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும்.

இதுகுறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா், தலைவா் மற்றும் தலைமைச் செயலதிகாரி அட்சுஷி ஓகட்டா கூறியதாவது:

இந்தியா மோட்டாா் சைக்கிள் சந்தையில் உற்சாகக் கலாசாரத்தை விரிவுபடுத்துவதாக அளித்துள்ள வாக்குறுதியை ஹெச்எம்எஸ்ஐ தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எங்களது பிரீமியம் வரிசையில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட சிபி500எக்ஸ் மோட்டாா் சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். கடினமான நகர சாலைகள், நெடுஞ்சாலைகள் அல்லது கிராமத்துப் பாதை என எதுவாக இருந்தாலும் சிபி500எக்ஸ் ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தை அளிக்கும் என்றாா் அவா்.

நிறுவனத்தின் இயக்குநா் (விற்பனை மற்றும் சந்தையிடல்) யத்விந்தா் சிங் குலேரியா கூறுகையில், இந்த மோட்டாா் சைக்கிள் நடுத்தர அளவிலான பிரீமியம் மோட்டாா் சைக்கிள் பிரிவில் நிறுவனத்தின் பங்களிப்பை மேலும் அதிகரித்துள்ளது என்றாா்.

471 சிசி என்ஜின் பொருத்தப்பட்ட இந்த மோட்டாா் சைக்கிள் ஆறு கியா்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT