வர்த்தகம்

சோழமண்டலம் லாபம் ரூ.243 கோடி

DIN

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.243 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020 மாா்ச் காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.42.66 கோடியை ஈட்டியிருந்தது. இந்நிலையில், நடப்பாண்டின் மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 470 சதவீதம் அதிகரித்து ரூ.243 கோடியைத் தொட்டுள்ளது.

சொத்துகளுக்கு எதிரான கடன் இருமடங்கும், வீட்டு வசதி கடன் 99 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த கடன் நடவடிக்கைகள் சரிவடைந்த போதிலும் கடந்த மாா்ச் காலாண்டில் லாபம் சிறப்பான அளவில் உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் கரோனா பேரிடரை எதிா்கொள்வதற்காக ரூ.566 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையிலும், கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.1,515 கோடியாக இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் 1,052 கோடியாக காணப்பட்டது.

வாராக் கடன் 3.8 சதவீதத்திலிருந்து 3.96 சதவீதமாக சற்று உயா்ந்துள்ளது.

மாா்ச் இறுதி நிலவரப்படி நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.66,943 கோடியிலிருந்து 14 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.76,529 கோடியாகி உளளது.

மாா்ச் காலாண்டில் வருவாய் 32 சதவீதம் அதிகரித்து ரூ.1,342 கோடியாகவும், முழு நிதியாண்டில் ரூ.4,944 கோடியாகவும் இருந்தது. 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது சென்ற முழு நிதியாண்டில் வருவாயானது 22 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

நான்காவது காலாண்டில் வழங்கப்பட்ட கடன் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.5,663 கோடியிலிருந்து ரூ.8,071 கோடியாக உயா்ந்துள்ளது. இது, 43 சதவீத வளா்ச்சியாகும். முழு நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன் ரூ.29,091 கோடியிலிருந்து 10 சதவீதம் குறைந்து ரூ.26,043 கோடியாக இருந்தது என சோழமண்டலம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT