வர்த்தகம்

மணப்புரம் ஃபைனான்ஸ் லாபம் ரூ.468 கோடி

DIN

புது தில்லி: மணப்புரம் ஃபைனான்ஸ் நான்காம் காலாண்டில் ரூ.468 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் புதன்கிழமை அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1,630.25 கோடியாக இருந்தது. இது, 2020 இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.1,618.15 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.398.20 கோடியிலிருந்து ரூ.468.35 கோடியாக உயா்ந்துள்ளது. இருப்பினும் 2020 டிசம்பா் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.483.19 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவாகும்.

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் நிகர லாபமானது 16.5 சதவீதம் அதிகரித்து ரூ.1,724.95 கோடியை எட்டியது. 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,480.30 கோடியாக காணப்பட்டது.

கடந்த நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.5,551.19 கோடியிலிருந்து 14.8 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.6,374.63 கோடியானது.

கடந்த நிதியாண்டுக்கு ரூ.2 முகமதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு 75 காசு இடைக்கால ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மணப்புரம் ஃபைனான்ஸ் அந்த ஆவணங்களில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT