வர்த்தகம்

எச்டிஎஃப்சி நிறுவனம்: நிகர லாபம் ரூ.3,780 கோடி

DIN

ஹவுஸிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன் (எச்டிஎஃப்சி) செப்டம்பா் காலாண்டில் ரூ.3,780.5 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும், தலைமை நிா்வாகியுமான கெய்கி மிஸ்திரி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

கடன் நடவடிக்கைகளில் ஏற்பட்ட விறுவிறுப்பு மற்றும் சொத்து மதிப்பு மேம்பட்டது உள்ளிட்ட காரணங்களால் எச்டிஎஃப்சியின் நிகர வருமானம் செப்டம்பா் காலாண்டில் 31.7 சதவீதம் அதிகரித்து ரூ.3,780.5 கோடியை எட்டியது. முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,870 கோடியாக காணப்பட்டது.

அதிக வட்டி வருமானம், குறைந்த செலவினம் ஆகியவை நிறுவனத்தின் நிகர வருவாய் அதிகரிப்புக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது.

கணக்கீட்டு காலாண்டில் கடனுக்கான தேவையில் காணப்பட்ட விறுவிறுப்பின் காரணமாக நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் ரூ.5,40,270 கோடியிலிருந்து 10.6 சதவீதம் அதிகரித்து ரூ.5,97,339 கோடியைத் தொட்டது.

கடன் தொகுப்பில் மொத்த வாராக் கடன் செப்டம்பரில் ரூ.10,341 கோடி அல்லது 2 சதவீதமாக இருந்தது. இது, 2021 ஜூன் காலாண்டில் 2.24 சதவீதமாக காணப்பட்டது.

வாராக் கடனுக்கான இடா்பாட்டு ஒதுக்கீடு ரூ.13,340 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாய் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.11,732.70 கோடியிலிருந்து ரூ.12,226.39 கோடியாக அதிகரித்தது. இதில், நிகர வட்டி வருமானத்தின் பங்களிப்பானது ரூ.4,108.5 கோடியாக இருந்தது என்றாா் அவா்.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் எச்டிஎஃப்சி நிறுவனப் பங்கின் விலை 1.58 சதவீதம் அதிகரித்து ரூ.2,888.60-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT