வர்த்தகம்

இந்தியா சிமென்ட்ஸ்: நிகர லாபம் ரூ.33 கோடி

DIN

புது தில்லி: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.32.53 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் வாயிலாக ரூ.1,234.85 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,089.96 கோடியுடன் ஒப்பிடும்போது 13.29 சதவீதம் அதிகமாகும்.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.69.21 கோடியிலிருந்து 56.8 சதவீதம் சரிவடைந்து ரூ.32.53 கோடியானது.

முக்கிய சந்தைகளில் வெள்ள பாதிப்பு மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தால் மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவைச் சந்தித்தது.

செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி 8 சதவீதம் மேம்பட்டுள்ளது.

நிறுவனத்தின் செலவினம் ரூ.980.83 கோடியிலிருந்து 22.51 சதவீதம் அதிகரித்து ரூ.1,201.61 கோடியானது என இந்தியா சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் இந்தியா சிமென்ட்ஸ் பங்கின் விலை 5.72 சதவீதம் குறைந்து ரூ.210.20-ஆக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT